முக்கிய பொறுப்புகளை ஆளும் பெண்கள்! தவெக ஆட்சியில் முதல் பெண் சட்டப்பேரவை செயலாளராக சாந்தி பொறுப்பேற்பு
தமிழக சட்டமன்றத்தின் முதல் பெண் செயலாளர் சாந்தி பதவியேற்றார்.
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய ஆட்சியில் பெண் ஐஏஎஸ் (IAS) மற்றும் ஐபிஎஸ் (IPS) அதிகாரிகளுக்கு மிக முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாடு சட்டப்பேரவையின் செயலாளர் சீனிவாசன் ராஜினாமா செய்த நிலையில், அவருக்கு அடுத்த நிலையில் சிறப்புப் செயலாளராக இருந்த சாந்தி, இன்று புதிய செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
முன்னதாக சட்டத் துறையின் செயலாளராக கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்த சி.ஜார்ஜ் அலெக்சாண்டர், அரசு பணியிலிருந்து 31.05.2026 அன்று ஓய்வு பெற்றார். அவரது ஓய்வைத் தொடர்ந்து, மாநில சட்ட ஆணையத்தின் முழுநேர உறுப்பினர் செயலாளராக பணியாற்றி வந்த ப.சுமதி, 02.06.2026 முதல் சட்டத் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.