×

“இன்று மீண்டும் முதலமைச்சரை நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை”- சண்முகம்

 

சென்னை தியாகராயர் நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் சண்முகம் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டம் நிறைவடைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த மாநிலச் செயலாளர் சண்முகம், “நேற்றைய தினம் தொகுதி எண்ணிக்கை சம்பந்தமாக முதலமைச்சருடன் நடத்திய பேச்சு வார்த்தைக் குறித்து இன்றைய மாநில செயற்குழுவில் விவாதித்தோம். இன்று மீண்டும் முதலமைச்சரை நேரடியாக சந்தித்து பேசி முடிவெடுப்பது என்பதை செயற்குழு கூட்டத்தில் தீர்மானித்துள்ளோம். நேற்றே சொல்லிவிட்டேன், சென்னையில் கட்டாயம் ஒரு தொகுதி கேட்போம். இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகி விடுமா என்பது முதலமைச்சரை சந்தித்த பிறகு தான் சொல்ல முடியும். இழுபறியாக நாங்கள் நினைக்கவில்லை. நிறைய கட்சிகள் இருப்பதால் ஒவ்வொரு கட்சியுடனும் பேசி தீர்வு காணுவது என்பது சில கால அவகாசம் தேவைப்படக்கூடிய விஷயம்தான். அதை இழுபறி என்று சொல்ல வேண்டாம்” என்றார்.