×

“மணிகண்டன் மீதான பாலியல் புகார்- போதுமான ஆதாரம் உள்ளது; சட்டம் தன் கடமையை செய்யும்”

அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்த மணிகண்டனும், தானும் ஒன்றாக வாழ்ந்ததாகவும், தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதுடன், கட்டாயப்படுத்தி கருகலைப்பு செய்ய வைத்ததாகவும், அந்தரங்க படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டுவதாகவும் நடிகை சாந்தினி சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் எழும்பூர் காவலர் மருத்துவமனையில் கொரோனா தொற்று ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள 19 காவலர்களை, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கொரோனா கவச உடை அணிந்து சென்று நலம் விசாரித்தார்.
 

அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்த மணிகண்டனும், தானும் ஒன்றாக வாழ்ந்ததாகவும், தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதுடன், கட்டாயப்படுத்தி கருகலைப்பு செய்ய வைத்ததாகவும், அந்தரங்க படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டுவதாகவும் நடிகை சாந்தினி சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் எழும்பூர் காவலர் மருத்துவமனையில் கொரோனா தொற்று ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள 19 காவலர்களை, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கொரோனா கவச உடை அணிந்து சென்று நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , “முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான பாலியல் புகார் தொடர்பாக போதுமான ஆதாரம் உள்ளது. அவரது முன் ஜாமீன் மனுவை கடுமையாக எதிர்ப்போம். புகார் கொடுத்த நடிகையை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி வாக்குமூலம் பெற திட்டமிடப்பட்டுள்ளது. காவலர் மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள் கேட்டிருக்கிறோம். பள்ளிகள் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டில் முறைப்படி புகார் கொடுத்தால் முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறினார்.