☰
×

ரூ.634 கோடி விவகாரத்தில் எனக்கும் தொடர்பா?- 'செம்பருத்தி' நடிகை விளக்கம் 

 

ரூ.634 கோடி விவகாரத்தில் தனது பெயர் மற்றும் புகைப்படங்கள் பரப்பப்படுவது குறித்து நடிகை ஷபானா ஷாஜஹான் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

திமுக ஆட்சி காலத்தில் நகராட்சி நிர்வாக துறையில், 2,538 உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனத்துக்கு 634 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யும்படி, தமிழக டிஜிபி-க்கு, அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக எம்.பி. ஐ.எஸ்.இன்பதுரை தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறை கடிதத்தின் அடிப்படையில் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து ரூ.634 கோடி பணியிட நியமன முறைகேடு புகார் தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் தற்போது சின்னத்திரை நடிகைகளின் பெயர்களும் அடிபடுகின்றன.  அதாவது, சின்னத்திரை நடிகைகளின் வங்கிக் கணக்குகள் பணப் பரிமாற்றம் நடந்திருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனின் உதவியாளர் கவிபிரசாத் மற்றும் செல்வமணி ஆகியோர் மூலமாகப் பல்வேறு தொகைகள் நடிகைகளின் வங்கிக் கணக்குகளுக்கு கமிஷன் அடிப்படையில் செலுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜனனி அசோக்குமாரின் நெருங்கிய தோழி செம்பருத்தி நாடகப்புகழ் சின்னத்திரை நடிகை ஷபானா, "ஒரு முக்கிய அரசியல்வாதி சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் [ரூ.634 கோடி] வழக்கு தொடர்பாக, கடந்த இரண்டு நாட்களாக எனது பெயரும் புகைப்படங்களும் யூடியூப், எக்ஸ்பாக், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பரவி வருகின்றன. குற்றச்சாட்டுகள் தனிப்பட்ட முறையில் அதிகரித்து வருகின்றன, மேலும் மக்கள் என்னிடம் விளக்கம் கேட்கிறார்கள். என்னிடம் பதில்கள் கேட்கப்படுவதற்கு முன்பே, எனக்கும் சில கேள்விகள் உள்ளன. விவாதிக்கப்படும் ஆவணத்தில் என் பெயர் எங்கே இடம்பெற்றுள்ளது? இந்த விவகாரத்துடன் என்னை இணைப்தற்கான ஆதாரம் என்ன? யார் முதலில் என் பெயரை இதில் கொண்டு வந்தார்கள், எந்த அடிப்படையில்?என்னை இழிவுபடுத்தும் வகையிலும், பாலியல் ரீதியாக ஆபாசமாக சித்தரிக்கும் வகையிலும் மீம்ஸ்கள் மற்றும் பதிவுகள் வெளியிடப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது ஒரு தனிநபராக என் மீதான கடுமையான தாக்குதல். இந்த குற்றச்சாட்டுகளை உண்மையென நம்பி பரப்பிய, அவை பொய்யானவை என தெரிய வந்தால்,எவ்வளவு வேகமாகவும் பகிரங்கமாகவும் அவற்றை திருத்துவீர்களா? எனது பெயருக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை நீக்கவும் அதே முயற்சியை முற்றிலும் பொய்யானவை மற்றும் தவறாக வழிநடத்தக்கூடியவை" எனக் குறிப்பிட்டுள்ளார்.