திமுக ஆதரவாளரான PR சுந்தர் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு! எந்நேரமும் கைதாக வாய்ப்பு
திமுக ஆதரவாளரான PR சுந்தர் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரபல தொழிலதிபர் பி.ஆர்.சுந்தர் மீது பெண் செய்தி வாசிப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில் ஐஸ் ஹவுஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாலியல் தொல்லை, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், குற்றவியல் மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. வேலை தொடர்பாக ஏற்பட்ட பழக்கத்தை பயன்படுத்தி பாலியல் தொல்லை அளித்ததுடன், அலுவலகத்தில் மூன்று மணி நேரம் அடைத்து வைத்து மிரட்டியதாக புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில், பி.ஆர். சுந்தருக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறி அவரது மனைவி மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பங்கு சந்தை ஆலோசகர் என்ற போர்வையில் பிஆர் சுந்தர் சபரீசன், வேதமூர்த்தி, உதயநிதி ஸ்டாலின் போன்ற முக்கிய திமுக தலைவர்களின் சொத்துக்களை துபாயில் நிர்வகிப்பதாக கூறப்படுகிறது. புகாரை தொடர்ந்து பி.ஆர் சுந்தர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் தமிழக முதல்வர் விஜய்யின் அலுவலகம் அமைந்திருக்கும் பட்டினப்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் என்பது குறிப்பிடதக்கது.