×

வீட்டில் நடந்த பார்ட்டியில் பாலியல் தொல்லை-  மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது வழக்கு

 

கடந்த 2024 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி கோவையில் இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே 21ம் தேதி, கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் நடந்த பார்ட்டியில், 2 சிறுமிகளை பாலியல் சீண்டல் செய்ததாக கோவை கிராஸ் கட் சாலையில் உள்ள சபையை சேர்ந்த போதகர்  ஜான் ஜெபராஜ் மீது பாலியல் புகார் எழுந்தது. புகாரின் பேரில் கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் துறையினர் ஜான் ஜெபராஜ் மீது  போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தலைமறைவாக உள்ள ஜான் ஜெபராஜை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.