×

மக்கள் செல்வன் மீது பாலியல் குற்றச்சாட்டு..! என்ன நடந்தது தெரியுமா ? 

 

எந்த சர்ச்சையிலும் சிக்காத விஜய் சேதுபதி தனது படங்களில் மட்டும் பிஸியாக இருப்பார். எப்போதும் ரசிகர்கள் மீது அன்பும், மரியாதையும் கொண்டிருப்பார். மிகவும் எளிமையான மனிதர். இந்த சூழலில் விஜய் சேதுபதி மீது பாலியல் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரம்யா மோகன் என்ற பெண் தனது சமூக வலைதள பக்கத்தில் தனக்கு நன்கு அறிந்த பெண் ஒருவர் தனது ஆசைக்கு இணங்க கேரவனில் வைத்து ரூ.2 லட்சமும், பாலியல் விருப்பங்களுக்காக ரூ.50 ஆயிரமும் விஜய் சேதுபதி கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அந்த பெண் மேலும் கூறியிருப்பதாவது: கோலிவுட்டில் போதைப் பொருள் பயன்பாடு (சமீபத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா சிக்கியது) மற்றும் கேஸ்டிங் கவுச் என்று சொல்லப்படும் சினிமா வாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இது வெறும் விளையாட்டல்ல. எனக்கு தெரிந்த நன்கு அறிந்த பெண் ஒருவர் இந்த சூழலுக்கு இழுத்துச் செல்லப்பட்டு தற்போது மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அந்தப் பெண்ணை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த விஜய் சேதுபதி அவருக்கு ரூ.2 லட்சமும், பாலியல் ஆசைக்காக ரூ.50 ஆயிரமும் கொடுத்திருக்கிறார். ஆனால், இன்று நல்லவர் போன்று வேசம் போட்டுள்ளார். இப்படித்தான் அந்தப் பெண்ணைப் போன்று பலரது கதையும் இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால், இந்தப் பதிவை போட்டவர் உடனே அதனை நீக்கிவிட்டார். ஆனால், ரம்யா மோகன் அதனை தனது பக்கத்தில் விஜய் சேதுபதி இவ்வாறு செய்திருப்பதாக கூறி பதிவிட்டுள்ளார். மேலும், இது விஜய் சேதுபதி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்த உடனே ரம்யா மோகனை பலரும் விமர்சிக்க தொடங்கினர்.

அதற்கும் பதிலளித்த ரம்யா மோகன் சிலர் உண்மையை ஒப்புக்கொள்வதைவிட பாதிக்கப்பட்டவறை குறை சொல்வதிலும், ஆதாரம் குறித்து கேள்வி எழுப்புவதிலும் தான் தங்களது கவனத்தை செலுத்துகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணின் தொலை பேசி உரையாடல் அவரது பதிவு ஆகியவற்றை பார்க்கும் போது அவரது வலியும், வேதனையும் நன்கு புரிகிறது என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இதற்கு விஜய் சேதுபதி மௌனம் காத்து வருவதும், இதுவரையில் எந்தப் பதிலும் அவர் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.