×

சிங்கப்பெண் அதிரடி படையா? அப்படிலாம் ஒன்னும் இல்லையே... பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவிக்க சென்ற துப்புரவு பணியாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி

 

 சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் துப்புரவு பணியாளருக்கு பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி பகுதி சங்கராபுரம் ரோஜா வீதியில் துப்புரவு பணியாளர் செல்வி முத்துமாரி (20) துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து ராஜசேகர் (50) என்ற நபர் தன்னுடைய வீட்டையும் சுத்தம் செய்ய வேண்டும் என்று வம்பு இழுத்துக் கொண்டே வந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் முத்துமாரியின் அருகே வந்து பின்பக்கமாக அவரை கட்டிப்பிடித்து சாதிய ரீதியான அருவருப்பான வார்த்தைகளை கூறி தகாத இடத்தில் கை வைத்துள்ளார். 

பாதிக்கப்பட்ட செல்வி முத்துமாரி அவர்கள் தங்கள் துப்புரவு குழு தலைவருக்கு தகவல் தெரிவித்தார். பிறகு குழு தலைவர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். மேலும் சிங்கப்பெண் அதிரடி படை வேண்டும் என்று கேட்டார். அப்படி ஒரு படை அந்த பகுதியிலேயே கிடையாது என்று காவல் நிலையத்தில் இருந்து பதில் வந்தது.‌ அதன் பிறகு துப்புரவு பணியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ராஜசேகர் வீட்டிற்கு முன்பாக நின்று போராட்டம் செய்தனர். பிறகு பிரச்சனை எல்லாம் முடிந்து அனைவரும் சென்ற பிறகு காவல்துறை நிகழ்விடத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது.