பாலியல் வன்கொடுமை - ஜெம் வீரமணிக்கு எதிராக 10 சிறுமிகள் வாக்குமூலம்
Updated: Sep 24, 2026, 16:00 IST
ஜெம் வீரமணியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமிகளை ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
ஜெம் கிரானைட் வீரமணியால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமிகள் 10 பேரிடம் இதுவரை வாக்குமூலம் பெறப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஜெம் வீரமணியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமிகளை ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிகள் தற்போது மேஜராகியுள்ள நிலையில், சம்பவ இடங்களுக்கு அழைத்து சென்றும் போலீசார் வாக்குமூலம் பெற்றனர். Closer report கொடுக்கப்பட்ட வீடியோவில் இருந்த சிறுமியும் அடையாளம் காணப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் வீரமணி மீது FIR பதிவு செய்தது முன்பே தெரியும், தான் மிரட்டப்பட்டதாக போலீசாரிடம் சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார்.