காதல் செய்யும்போது உடலுறவு... நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!
காதல் உறவில் இருந்தபோது ஏற்பட்ட உடலுறவை, அந்த உறவு முறிந்த பிறகு வல்லுறவு என்று கூற முடியாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த நபர் தொடர்ந்த வழக்கின் விசாரணையின்போது இந்த முக்கிய கருத்தை நீதிமன்றம் பதிவு செய்தது. உடல்சார் உறவு கசந்து பிரிந்த பிறகு, அதை வல்லுறவு என முத்திரை குத்தும் போக்கு அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிமன்றம், இத்தகைய குற்றவியல் வழக்குகள் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
திருமணம் செய்வதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக, கேரளாவை சேர்ந்த சந்தோஷ்மார் என்பவருக்கு எதிரான ஒரு வல்லுறவு வழக்கு கேரளதில் தாக்கல் செய்யப்படு இருந்தது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கும்மாறு அவர் தெரிவித்த மேல்முறையீடு மனுவை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் விவி. நாகரத்தினா, ஆர். மகாதேவன் ஆகியோர் அமர்வு விசாரித்தது.
இந்த வழக்கில் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டதுடன் உடல் சார்ந்த நெருக்க சம்மதத்துடனான உறவுகள், சார்ந்த குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டும் போக்கு அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. என்றும் நல்ல முறையில் உறவு நிலை நிலவிய காலத்தில், இது போன்ற உடல் சார்ந்த நெருக்க உறவு கசந்து போய் முறிந்து விட்டதற்க்காகவே அதை பாலியல் வன்கொடுமை அல்லது வல்லுறவு என முத்திரை குத்த முடியாது, என்று தெரிவித்து இந்த வழக்கின் மேல்முறையீடு மனுதாரர் சந்தோஷ்குமாரை விடுதலை செய்து உத்தரவிட்டது.