கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்
ஓட்டு போட தென் மாவட்டங்களுக்கு செல்ல தாம்பரம் ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் முண்டியடிக்கிறது. கிளாம்பாக்கம் முதல் செங்கல்பட்டு வரை அணிவகுத்து நிற்கும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.
தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள மக்கள் தங்களின் சொந்த ஊரில் வாக்களிக்க செல்ல இருப்பதால் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றனர். சென்னையில் உள்ள மக்கள் தென் மாவட்டத்தை நோக்கி படையெடுத்துள்ளனர். இதனால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கிளாம்பாக்கம், ஐயஞ்சேரி, ஊராப்பாக்கம் ஆகிய பகுதியில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்க்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது
ஓரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தென் மாவட்டத்தை நோக்கி செல்வதால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை தாம்பரம் மாநகர காவல் துறை, போக்குவரத்து போலீசாரும் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள நெரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.