×

ரூ.130 கோடி நிலத்தை ரூ.70 கோடிக்கு விற்று செட்டில்மென்ட்! வீரமணி வழக்கு விறுவிறுப்பு

 

சிறுமி பாலியல் வழக்கின் FIRல் தன் பெயரை சேர்க்காமல் இருக்க தொழில் அதிபர் ஜெம் வீரமணி ரூ.70 கோடி வரை செலவழித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


சிறுமி பாலியல் வழக்கின் FIRல் தன் பெயரை சேர்க்காமல் இருக்க தொழில் அதிபர் ஜெம் வீரமணி ரூ.70 கோடி வரை செலவழித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீரமணியிடம் முக்கிய அரசியல் புள்ளிகள், அதிகாரத் தொடர்பில் இருந்தவர்கள் கோடிக்கணக்கில் பணம் வசூலித்ததாகவும் கூறப்படுகிறது. காவல்துறை உயர் அதிகாரிகள் முதல் அரசியல் புள்ளிகள் வரை பலருக்கு வீரமணி ரூ.70 கோடி வரை செட்டில் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை இசிஆர், உதகை பகுதிகளில் உள்ள ரூ.130 கோடி மதிப்பிலான நிலத்தை ரூ.70 கோடிக்கு விற்று செட்டில்மென்ட் செய்ததாக கூறப்படுகிறது.

சென்னையை சேர்ந்த பிரபல ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி ஒருவரின் மகன் மூலம் பலருக்கும் பணம் செட்டில்மென்ட் என தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கையாக ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி ஒருவரின் மகனை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டிவருகின்றன.