×

“மொழிவாரி சிறுபான்மையினர் முன்னேற்றத்திற்கு நிறுவனம்” – தமிழக அரசு அரசாணை

மொழிவாரி சிறுபான்மையினர் நலன் தொடர்பான முக்கிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது மற்றும் செளராஷ்டிரா உள்ளிட்ட மொழி பேசும் மக்கள், மொழிவாரி சிறுபான்மையினர் என அழைக்கப்படுகிறார்கள். இந்நிலையில் மொழிவாரி சிறுபான்மையினர் நலனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மொழிவாரி சிறுபான்மையினர் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான நிறுவனம் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனமானது சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. தொழில் தொடங்குவதற்கான கடனுதவி, வேலை வாய்ப்பை ஏற்படுத்தவும், தொழில் முனைவோர்களை
 

மொழிவாரி சிறுபான்மையினர் நலன் தொடர்பான முக்கிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது மற்றும் செளராஷ்டிரா உள்ளிட்ட மொழி பேசும் மக்கள், மொழிவாரி சிறுபான்மையினர் என அழைக்கப்படுகிறார்கள். இந்நிலையில் மொழிவாரி சிறுபான்மையினர் நலனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மொழிவாரி சிறுபான்மையினர் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான நிறுவனம் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனமானது சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.

தொழில் தொடங்குவதற்கான கடனுதவி, வேலை வாய்ப்பை ஏற்படுத்தவும், தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தவும், மொழிவாரி சிறுபான்மையினர் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.