×

“எங்கும் ஓடி ஒளியவில்லை”- செந்தில் பாலாஜி கடிதம்

 

நான் எங்கும் ஓடி ஒளியவில்லை, வழக்கு பதிவில் பெயர் இல்லாதபோது எப்படி விசாரணைக்கு ஆஜராக முடியும் என  திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடிதம் எழுதியுள்ளார்.

திருவல்லிக்கேணி காவல்துறைக்கு செந்தில் பாலாஜி எழுதியுள்ள கடிதத்தில், “த.வெ.க பேரம் பேசிய வழக்கு பதிவில் பெயர் இல்லாத போது இந்த வழக்கில் எப்படி விசாரணைக்கு ஆஜராக முடியும்? மேலும் நான் இந்த வழக்கில் ஆஜராகும் பட்சத்தில் வேறு எந்த வழக்கிலும் கைது செய்யக் கூடாது. நான் மக்கள் பிரதிநிதி அதுமட்டுமல்ல, பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் தொழிலதிபர் மற்றும் நான் எங்கும் ஓடி ஒளியவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.


தவெக ஆட்சியை கவிழ்க்க எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் காலை, மாலை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் செந்தில் பாலாஜி, அசோக் குமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் பெற்றனர். ஆனால் இன்று வரை காவல்நிலையத்தில் ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆஜராகவில்லை.