×

ஒன்றரை லட்சம் மகளிர் திரளும் பிரமாண்ட மாநாடு- வெற்றிக்கணக்கு மேற்கிலிருந்து உதயமாகட்டும்: செந்தில் பாலாஜி

 

வாக்குச்சாவடிக்கு 15 மகளிர் என  10,000 வாக்குச்சாவடிகளில் இருந்து ஒன்றரை லட்சம் மகளிர் திரளும் பிரம்மாண்டமான ‘வெல்லும் தமிழ்பெண்கள்’ மாநாடு... வெற்றிக்கணக்கு மேற்கிலிருந்து உதயமாகட்டும் என தி.மு.க மேற்கு மண்டல பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க மேற்கு மண்டல பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி தனது எக்ஸ் தளத்தில், “திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதியில், வருகின்ற டிசம்பர் 29, திங்கள் அன்று, 'வெல்லும் தமிழ்ப்பெண்கள்' மேற்கு மண்டல மாநாடு நடத்திட வாய்ப்பளித்த, கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களுக்கும், கழக துணைப் பொதுச்செயலாளர் திருமிகு கனிமொழி அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..