×

தமிழ்நாட்டில் மின்வெட்டு இல்லை; மின்தடை மட்டுமே உள்ளது: செந்தில் பாலாஜி

 

சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் அதிகரித்துவரும் மின் தேவையை எதிர்கொள்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி,  தலைமை பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள் மற்றும் செயற்பொறியாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். 

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “ஒட்டு மொத்தமாக தமிழ்நாடு முழுவதும் மின் தேவை என்பது கடந்த 2020-20210 ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டின் உச்சபட்ச மின் தேவை எவ்வளவு என்று பார்த்தால் அந்த கருத்துக்களின் உண்மை இந்த வருடம் கணக்கு பார்க்கும் போது ஏப்ரல், மே மாதத்தில் 45 நாட்களில் கணக்கெடுத்துப் பார்த்தால் தமிழ்நாட்டின் உச்சபட்ச மின் தேவை என்பது 19,387 அளவிற்கு தமிழ்நாடு முழுவதும் உட்சப்பட்ச மின் நுகர்வு அதிகரித்துள்ளது. அதேபோல, ஒரு நாள் சராசரி எடுத்துப் பார்த்தால் சென்னையில் 431 மில்லியன் அளவிற்கு இந்த உச்சபட்ச மின் தேவை அதிகரித்துள்ளது. 

16,481 மெகாவாட்டாக இருந்தது 2020-2021ல், அதுவே இப்போது 2023-2024ல் மெகாவாட் அதிகரித்துள்ளது. ஏறத்தாழ கணக்கெடுக்கும்போது 3,000 மெகாவாட் அதுவே, கடந்த காலங்களில் முந்தைய ஆட்சியில் 2019-2020ல் 369 மில்லியன் யூனிட் இருந்தது.  இப்போது 423 மில்லியன் யூனிட்டாக உயர்ந்திருக்கிறது. இவ்வளவு உயர்ந்தாலும் கூட எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் சீரான மின் விநியோகம் தமிழ்நாடு முழுவதும் அதற்கு காரணம் தமிழ்நாட்டினுடைய ஒப்பற்ற வழங்கப்பட்டும் வருகின்றன.

முதலமைச்சர் மாண்புமிகு தளபதி அவர்கள் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை, ஆய்வு கூட்டங்கள். கோடைக்காலத்திற்கு எது தேவையோ, அதை கோடை காலம் வருவதற்கு முன்னதாகவே குறிப்பாக, டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் கணக்கிடப்பட்டு, டெண்டர் விடப்பட்டு அதற்கான மின் கொள்முதல் செய்வதன் மூலமாக, எக்சேஞ்சில் வாங்கியதற்கும். நாம் டெண்டர் மூலம் வாங்குவதற்கும் வித்தியாசம் ஏறத்தாழ, 1.312 கோடி அளவிற்கு மின்சார வாரியத்திற்கான சேமிப்புகள் சட்டமன்றத்திலும் பேசப்பட்டிருக்கின்றன.

தமிழ்நாடு முழுவதும் எந்தவொரு பாதிப்பும் இல்லாத அளவிற்கு சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வரக்கூடிய நிலையில் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக ஒரு சில பகுதிகளில் சென்னையின் தேவை என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் தேவையை விட மிக கூடுதலாக அதிகரித்து இருக்கிறது. ஆகையால், அதில் சிறப்பு கவனங்கள் செலுத்த வேண்டும் என்று இந்த ஆய்வு கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது. 2019-202060 உச்சபட்ச அளவிற்கு இருந்திருக்கிறது. அதுவே 2020-2021ல் 3,127 மெகாவாட்டாக இருந்தது. இப்போது சென்னையை எடுத்துக்கொண்டால் 4.016 மெகாவாட்டாக உயர்திருக்கின்றன. சென்னையினுடைய தேவையை 2020-2021ல் கணக்கில் எடுத்துக்கொண்டால் 66 மில்லியன் யூனிட் அளவு இருந்தது, இப்போது இந்தாண்டு பார்த்தால் 90 மில்லியன் யூனிட் அளவிற்கு உயர்ந்திருக்கிறது. ஏறத்தாழ. மூன்றில் ஒரு பங்கு அளவிற்கு உயர்திருக்கின்றன. அந்த உயர்வு ஏற்பட்டாலும்கூட, மிக சிறப்பான பராமரிப்பு பணிகள் இந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. சென்னையில் மட்டும் இந்த இரண்டு வருடங்களில் 4,749 RMU புதிதாக நிறுவப்பட்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் திருக்கரங்களாலும், அதேபோல மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருக்கரங்களாலும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றன. அவர்களின்

சென்னையில் மட்டும் புதிதாக 3,447 மின்மாற்றிகள் நிறுவப்பட்டுள்ளது. 13 துணைமின் நிலையங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இப்படி கட்டமைப்புகளை இரண்டு ஆண்டுகளில் மிக வேகமாக போர்க்கால அடிப்படையில் வலுப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த அதிகரிக்கப்பட்ட சென்னையினுடைய மின் தேவைகள், வரக்கூடிய ஆண்டுகளில் கணக்கிடப்பட்டு இன்னும் என்னென்ன பணிகள் விநியோகத்திற்காக கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்றும், பட்டியலை தயார் செய்வதற்கு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன.

மின்சார வாரியத்தில் ஏற்படுகிற பழுதுகளை உடனுக்குடன் சரிசெய்யவேண்டும், முந்தைய காலங்களைப் போல் அல்லாமல் கூடுதல் மின் பளு காரணமாக சில இடங்களில் ஏற்படும் பழுதுகளை உடனுக்குடன் சரிசெய்து வருகிறோம். நேற்று குறிப்பிட்ட 5 அல்லது 6 இடங்களில் கேபிள் பழுது காரணமாக மின் தடை ஏற்பட்டதையும் நேற்றிரவே சரிசெய்யப்பட்டு சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டுவிட்டது. மாநகராட்சியின் மழை நீர் வடிகால் பணிகளின் போது சில இடங்களில் புதைவடங்களில் பழுது ஏற்படுவதால் மின் தடை ஏற்படுகிறது. அதையும் உடனுக்குடன் மற்றொரு பீடர் வழியாக சில நிமிடங்களில் மாற்றி வழங்கப்பட்டு வருகிறது. சமுக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்ட இடங்களிலும் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து மின் தடை சரிசெய்யப்பட்டு வருகிறது.

நேற்று கூட ஒன்றிய எரிசக்தித் துறை அமைச்சகம், மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்களுக்கு எழுதிய பாராட்டுக் கடிதத்தில் தேசிய அளவில் இதற்கு முந்தைய 2018-2019ஆம் ஆண்டில் ஊரகப் பகுதிகளுக்கு வழங்கப்படும் மின் விநியோகம் நாளொன்றுக்கு 20 மணி நேரம் 10 நிமிடங்களாக வழங்கப்பட்டு வந்த நிலையில் 2021-2022ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 22 மணி நேரம் 15 நிமிடங்களாக உயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டி தனது பாராட்டை தெரிவித்துள்ளது.

கடந்த ஆட்சியில் மின் மிகை மாநிலமாக இருந்ததாக குறிப்பிடுகிறார்கள். அப்படி இருந்திருந்தால் ஏன் 4.5 இலட்சம் விவசாய மின் இணைப்புக்காக விவசாயிகள் காத்திருந்தனர். தற்போது மாண்புமிகு தளபதி அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பின் 1,50 இலட்சம் விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் 50,000 இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தற்போது, மின் உற்பத்தி திட்டங்களை அதிகரித்து மின் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்து முடிக்காத பணிகளை முடித்து வருகிறோம். சர்க்கரை ஆலைகளில் இணைமின் உற்பத்தி நிலையங்களுக்கான பணிகள் குறித்த காலத்தில் முடிக்காததால் ரூபாய் 1,200 கோடி மதிப்பீட்டிற்கு கூடுதலாக வட்டி மட்டும் 1,300 கோடி செலுத்தி இருக்கிறோம். ரூபாய் 1,200 கோடி திட்ட மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட திட்ட மதிப்பீடு தற்போது 2,500 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த கோடை காலத்தில் எவ்வளவு மின் தேவை அதிகரித்தாலும் அதை சமாளிக்கக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மின்சார வாரியம் எடுத்துள்ளது. இந்தியாவிலுள்ள ஒரு மாநிலத்தின் மின் தேவையை விட அதிக மின் தேவை சென்னையில் மட்டும் பதிவாகிறது. அதையும் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறத” என்றார்.