#BREAKING "எனக்கும் அதுக்கும் தொடர்பில்லை”- முன்ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி ஐகோர்ட்டில் மனு தாக்கல்
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை கவிழ்க்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் தேடப்பட்டுவரும் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை கவிழ்க்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் சம்மன் அனுப்பியும் ஆஜராகாத செந்தில்பாலாஜி, எங்கிருக்கிறார் என்ற தகவல் தற்போது வரை வெளியாகவில்லை. இந்நிலையில் ஆட்சிக்கவிழ்ப்பு சதி தொடர்பாக முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார் செந்தில்பாலாஜி. கடந்த 27-ம் தேதிக்கு பிறகு அவர், கட்சி கூட்டங்களில் பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது செல்போன்களும் அணைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 7 நாட்களாக தலைமறைவாக உள்ள செந்தில்பாலாஜி, திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்திற்கும் சில நாட்களாக அவர் வரவில்லை.
இந்நிலையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை கவிழ்க்க முயற்சித்து ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசியதாக தொடரபட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில், அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குதிரை பேரத்துக்கு எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.