#BREAKING செந்தில்பாலாஜியை கைது செய்ய தடை
செந்தில்பாலாஜி திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் இன்றும் கையெழுத்திட ஆஜராகவில்லை.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 7 பேர் மீது வழக்கு பதிவான நிலையில் இருவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரை ரகசிய இடத்தில் வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கில் செந்தில்பாலாஜி எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி மனுதாக்கல் செய்திருந்தார். அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். டாஸ்மாக் முறைகேடு வழக்கில் செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. செந்தில்பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைப்பார், மறு உத்தரவு வரும்வரை அவரை கைது செய்யக்கூடாது என்றும் போலீசாருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே குதிரை பேர வழக்கில் ஜாமின் நிபந்தனை படி ஒரு நாளில் 2 முறை செந்தில்பாலாஜி கையெழுத்திட வேண்டும். ஆனால் நேற்று முதல் செந்தில்பாலாஜி திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் கையெழுத்திட ஆஜராகவில்லை. இன்று செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரும் கையெழுத்திடவில்லை. இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க திருவல்லிக்கேணி போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனிடையே திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாட்களுக்கு விலக்கு வேண்டும் எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி மனுத்தாக்கல் செய்துள்ளார்.