சிபிஐ விசாரணைக்கு ஆஜராகும் செந்தில் பாலாஜி
கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அஜராகவுள்ளார்.
கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் ஜன.12 மற்றும் 19ம் தேதிகளில் நடிகர் விஜய் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி இருந்தார். இன்று மீண்டும் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணை ஆஜராகியுள்ளார். விஜய்யிடம் இது மூன்றாவது முறையாக நடைபெறும் விசாரணையாகும்.
கரூர் பெருந்துயரத்துக்கு செந்தில் பாலாஜிதான் காரணம் என தவெக தரப்பில் புகாரளிக்கப்பட்டிருந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இதனையடுத்து டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக மார்ச் 17-ஆம் தேதி நேரில் ஆஜராகப்போவதாக செந்தில் பாலாஜி தரப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.