×

சேலத்தில் பரபரப்பு..! பெண்ணின் கன்னத்தில் அறைந்த அதிமுக முன்னாள் MLA..!

 

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் அர்ஜுனன் சேலத்தில் சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட சென்றபோது, பொதுமக்களுடன் திடீரென கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சூழல் பதற்றமாக இருந்த நிலையில், அவர் திடீரென ஒரு பெண்ணை கன்னத்தில் அறைந்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பெண்ணை அடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 


சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் அர்ஜூனன். இவர் திமுகவில் எம்பியாக இருந்தார்.அதன்பிறகு திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா அணி சார்பில் 1989 ம் ஆண்டில் சேலம் மாவட்டம் தாரமங்கலம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிறகு 1991ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் வீரபாண்டி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவானார்.

இந்நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமனேரி மற்றும் சின்னதிருப்பதி இடையே சாலை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. பல இடங்களில் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் அர்ஜூனனுக்கு சொந்தமான இடம் உள்ளது. அங்கு சாலை விரிவாக்கம் செய்ய அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதேவேளையில் அந்த பகுதியில் வசிக்கும் மக்களின் நிலத்துக்கு அருகே சாலை விரிவாக்கம் செய்யும்படி கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அங்குள்ள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  ஆத்திரமடைந்த அர்ஜூனன் தனது வேஷ்டியை மடித்து கட்டி ஆக்ரோஷமாக சென்று ஒரு பெண்ணின் கன்னத்தில் அறைந்தார்.

பெண்ணை அடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ‘ஒரு பெண்ணை எப்படி அடிக்கலாம்?’ என்று உள்ளூர் மக்கள் கேள்வி எழுப்பி அர்ஜுனனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த செயலுக்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.