×

பொள்ளாச்சியில் பரபரப்பு! பிசியோதெரபி என்ற பெயரில் பாலியல் தொழில்!

 

பொள்ளாச்சி பல்லடம் சாலையில் கேரளியம் ஆயுர்வேதிக் பிசியோதெரபி என்ற பெயரில் மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாக பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அடுத்து இன்று மகாலிங்கபுரம் காவல் துறையினர் வாடிக்கையாளர்களை போல அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு மூன்று இளம் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. மேலும் பாலியல் தொழில் வாடிக்கையாக நடந்து வந்ததும் தெரிய வந்தது.

பிசியோதெரபி கிளினிக் சென்டரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த சென்னை , சேலம் , கோவை மாவட்டத்தைச் சென்ற மூன்று இளம் பெண்களை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனீஸ் மற்றும் அவருடன் இருக்கும் இளம் பெண் இருவரும் சேர்ந்து நடத்தி வந்த இந்த கிளினிக்கில் பிசியோதெரபி அக்கு பஞ்சர் சிகிச்சை அளிக்கப்படும் என ஆன்லைன் வாயிலாக வாடிக்கையாளர்களை முன் பதிவு செய்து இளம் பெண்களை வைத்து பாலியல் தொழிலும் செய்து வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் ஒருவரை நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர். மற்ற இரு இளம் பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கபட்டுள்ளனர். மேலும் அக்கு பஞ்சர் கிளினிக் நடத்தி வந்த உரிமையாளர் அனீஸ் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.