×

சென்னையில் பரபரப்பு..!சென்னை தலைமை செயலகத்துக்கு வெளியே திடீர் புகைமூட்டம்..! 

 

சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தமிழக தலைமைச் செயலகம் உள்ளது.

இந்த நிலையில் இன்று காலை 11 மணியளவில் திடீரென தலைமைச் செயலகம் அருகே புகைமூட்டம் ஏற்பட்டது. மேலும் அந்த புகைமூட்டம் துர்நாற்றம் வீசும் அளவுக்கு இருந்தது. இதனால் அப்பகுதிகளில் நின்றிருந்த பொதுமக்கள், காவல்துறையினர், வாகன ஓட்டிகள் பலருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இந்த புகை எங்கிருந்து வருகிறது என்று தெரியாததால் பலரும் திகைத்தனர். தலைமைச் செயலகம் அருகே ஏற்பட்ட இந்த திடீர் புகை காரணமாக அப்பகுதியில் இருந்தவர்கள் கடும் அவதியடைந்தனர்.

இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்துக்கு வெளியே திடீர் புகைமூட்டம் குறித்து துறைமுக நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.  

வெயில் காரணமாக துறைமுகத்திலிருந்த சல்ஃபர் ரசாயனத்திலிருந்து வாயு வெளியேறியது; தீ விபத்து ஏதும் இல்லை என கூறியுள்ளது சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்திலேயே துறைமுக வளாகம் தொடங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மக்களே உஷார்.

சென்னை தலைமை செயலகம் அருகே வாயு கசிவு.

வாயு கசிவால் தலைமைச் செயலகப் பகுதியில் வெண் புகைமூட்டம்.

அருகே உள்ள துறைமுகத்தில் உள்ள ரசாயன கப்பலில் இருந்து சல்பேட் வாயு கசிந்ததாக தகவல்.

காற்றில் அம்மோனியா மற்றும் நைட்ரஜன் டை ஆக்ஸைடு உள்ளிட்ட வாயு கலப்பு... pic.twitter.com/qQj1dcqNKF

— Ramesh (@RHoneykumar) June 2, 2026