☰
×

செஞ்சி சிறுமி விவகாரம் - காணாமல் போன இடத்தில் "மனித எலும்புக்கூடு"  

 

செஞ்சி சிறுமி மாயமான பகுதியில் பரதன் தாங்கல் ஏரி அருகே முட்புதரில் மனித எலும்பு கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

செஞ்சி அருகே 7 வயது சிறுமி காணாமல் போய் 33 நாட்களை கடந்தும் கண்டுபிடிக்கமுடியவில்லை. சிறுமி காணாமல் போனது குறித்து  சிபிசிஐடி போலீசார்  23 வது நாளாக விசாரணை நடத்திவருகின்றனர். சிறுவாடி காப்புகாடு பகுதியில் மோப்ப நாய்களுடன் சென்ற  போலீசார் தேடுதல் வேட்டையில் களமிறங்கினர். 

செஞ்சி சிறுமி மாயமான பகுதியில் உள்ள பரதன் தாங்கல் ஏரி அருகே முட்புதரில் மனித எலும்பு கூடு கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மீட்கப்பட்ட எலும்பு கூடு யாருடையது? என சிறுவாடி காப்பு காடு பகுதியில் சிபிசிஐடி போலீசார் தீவிர சோதனை நடத்திவருகின்றனர்.