செங்கோட்டையன் சொன்ன முதல் வார்த்தை...
Updated: Sep 5, 2025, 10:33 IST
முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன் வருகிற 5-ந் தேதி (அதாவது இன்று) கோபியில் உள்ள புறநகர் மேற்கு மாவட்ட அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மனம் திறந்து பேச உள்ளேன் என கூறினார்.
அதன்படி, கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கோபி கரட்டூர் ரோட்டில் உள்ள கோபி புறநகர் மேற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். EPS மீது நீண்ட காலமாக அதிருப்தியில் இருக்கும் அவர், என்ன பேசப்போகிறார் என்பதை அறிய அதிமுகவினர் மட்டுமின்றி, ஒட்டுமொத்த அரசியல் களமே காத்திருக்கிறது. முன்னதாக ரோடு ஷோ நடத்தி டிவிஸ்ட் கொடுத்தார்.
மேலும் அவர் சொன்ன முதல் வார்த்தை இது தான் , 1975ம் ஆண்டு நடந்த பொதுக்குழு கூட்டத்தில் எம்ஜிஆர் என்னை பொருளாளராக நியமித்தார். பல்வேறு முக்கிய பொறுப்புகளை கொடுத்து அதிமுக தலைவர்கள் என்னை அழகு பார்த்தனர்" என தெரிவித்தார்.
அப்போது, "செல்வாக்கு மிக்க தலைவராக இருந்தவர் எம்ஜிஆர். ஆனால், அவரே கட்சியில் இருந்து விலகிய சிலரை நேரில் சந்தித்து வந்தவர். தமிழ்நாட்டு மக்களுக்காக உருவாக்கிய கட்சி இது என்று அழைத்தார். அப்படிப்பட்ட கட்சி இது" என தொடர்ந்து பேசி வருகிறார்.
முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ஈபிஎஸ்-ஐ முதல்வராக முன்மொழிந்தவர் சசிகலாதான். கட்சி உடையக்கூடாது என்பதற்காக நான் பல தியாகங்களை செய்துள்ளேன். கட்சி ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் எனது கருத்து" என்றார்.