×

"விஜய் படத்தில் மட்டுமல்ல எதிர்கால தமிழ்நாட்டின் ஹீரோ”- செங்கோட்டையன்

 

திமுக காரர்களின் வீட்டுக்கு சென்று யாருக்கு ஓட்டு என்று கேட்டாலும் விஜய்யின் பெயரை தான் சொல்கிறார்கள் என தவெக நிர்வாக குழு தலைவர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்றுவரும் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிய செங்கோட்டையன், “பத்து கூட்டணி, எட்டு கூட்டணி இதையெல்லாம் முறியடிக்கும் சக்தி விஜய்க்கு தான் உள்ளது. எத்தனை கூட்டணி வைத்துக் கொண்டாலும் அதை வீழ்த்தி வெற்றி பெறுவார் தளபதி விஜய். கேட்காமலே கொடுக்கப்போகும் தலைவர் தமிழகத்தில் தோன்ற போகிறார், அவர் தான் தமிழ் மண்ணில் முதலமைச்சராக வரப்போகிறார். எந்த சக்தியாலும் இனி ஒன்னும் பண்ண முடியாது. திமுக காரர்களின் வீட்டுக்கு சென்று யாருக்கு ஓட்டு என்று கேட்டாலும் விஜய்யின் பெயரை தான் சொல்கிறார்கள்.

இந்திய வரலாற்றில் யாருக்குமே இல்லாத ஒரு புகழ் தலைவர் விஜயைக்கு இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்தும் ஒரே தலைவர் தளபதி விஜய் தான். தலைவர் விஜய் திரைப்படத்தில் மட்டும் ஹீரோ இல்லை எதிர்கால தமிழ்நாட்டின் ஹீரோவும் அவர்தான். இன்றைய கூட்டத்தில் எல்லோரும் கையில் விசிலை வைத்திருக்கிறீர்கள் நாளை காவல்துறையினர் கூட கையில் விசிலை வைத்திருக்க முடியாத சூழல் ஏற்படலாம். தூங்கிக்கொண்டிருப்பவர் காதுகளில் விசிலை அடித்துவிடாதீர்கள். ஓட்டு போய்விடும். ” என்றார்.