×

“எடப்பாடி பழனிசாமி பெரிய தலைவர் அல்ல; அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்ல” - செங்கோட்டையன்

 

எடப்பாடி பழனிசாமி பெரிய தலைவர் அல்ல; அதனால் அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என ஈபிஎஸ் குறித்து கேள்விக்கு தவெக நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.


செங்கோட்டையன் சுயநலவாதி என எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில், அதற்கு பதிலளித்த செங்கோட்டையன், “எடப்பாடி பெரிய தலைவர் இல்ல. அவர் சொல்றதுக்குலாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்ல. யார் வேணும்னாலும் எத வேணும்னாலும் சொல்லட்டும். என்னை பொறுத்தவரை நான் தெளிவாக இருக்கிறேன். தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பு வழங்குவார்கள்.