“பள்ளி மாணவர்களுக்கு சாதி விவரத்துடன் அடையாள அட்டை வழங்க முடிவு செய்துள்ளோம்”- செங்கோட்டையன்
அரசு பள்ளி மாணவர்களுக்கு சாதி அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளது.
கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “அரசு பள்ளி மாணவர்களுக்கு சாதி அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 10ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பெயர், முகவரி, சாதி, ப்ளட் க்ரூப், ஆதார் உள்ளிட்ட தரவுகளுடன் வழங்கப்படவுள்ளது. முதலமைச்சர் விஜய் பொதுவாக அதிகம் பேசுவதில்லை. ஆனால் அவரது சிந்தனை நேர்மையான ஆட்சியை வழங்குவதில்தான் உள்ளது. சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் பேசும்போது எந்தவித குறுக்கீடும் ஏற்படுத்தப்படவில்லை. வெளியே சென்று கருத்து தெரிவிப்பதைவிட சம்பந்தப்பட்டவர்கள் தங்களது கருத்துக்களை உள்ளேயே தெரிவித்திருக்கலாம்.
புரட்சி தலைவரோடு பயணம் செய்தேன் அவர் ஆட்சி கட்டிலில் அமர்ந்தார், அதே போல் அம்மாவோடு பயணம் செய்தேன் அவரும் ஆட்சி அமைத்தார்.. இப்போது தளபதி விஜயோடு இணைந்தோம் த.வெ.க ஆட்சி அமைத்திருக்கிறது.கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன் இனி நடமாட முடியுமா என எல்லோரும் பேசினார்கள். ஆனால், இப்போது இதே மண்ணில் நலத்திட்ட உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கிறேன்” என்றார்.