×

கட்சிக்கு ஆள்பிடிக்கும் நிலையில் தவெக இல்லை- செங்கோட்டையன்

 

முன்னாள் முதல்வர்கள் மாதிரி அறிக்கை விடும் முதல்வர் அல்ல விஜய், அனைத்து துறைகளையும் ஆய்வு செய்து செயல்களில் செயல்படுத்துற முதல்வர் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “தவெக குறித்து விமர்சனம் செய்த நிலையில், மக்களால் நிராகரிக்கப்பட்ட திமுக தலைவர் ஸ்டாலின் பேசவே கூடாது. கட்சிக்கு ஆள்பிடிக்கும் நிலையில் தவெக இல்லை. திமுக ஆட்சியில் இருந்த போது பலர் அக்கட்சிக்கு சென்றுள்ளனர். மாற்றுக்கட்சியினர் தவெகவை தேடி வருகிறார்கள். திமுக- அதிமுக இணைந்து ஆட்சியை பிடிக்கலாம் என நினைத்தவர் யார்? திமுக, அதிமுக கூட்டு சதியை முறியடித்தவர் முதலமைச்சர் விஜய்.. . முன்னாள் முதல்வர்கள் மாதிரி அறிக்கை விடும் முதல்வர் அல்ல விஜய், அனைத்து துறைகளையும் ஆய்வு செய்து செயல்களில் செயல்படுத்துற முதல்வர். பிரதமரை சந்தித்து தமிழ்நாட்டின் நலனுக்கான மனுக்களை கொடுத்திருக்கிறார். அதிமுகவில் இபிஎஸ் மகனை கொன்று வர முயற்சி என்பது ஒரு சிறிய குற்றச்சாட்டுதான். சோலார் மின் தயாரிப்பிற்கான மத்திய அரசின் மானியத்தை திமுகவால் ஏன் பெற முடியவில்லை” என்றார்.