×

“அண்ணாமலைக்கு ஏற்பட்ட வேதனையால் பாஜகவிலிருந்து விலகினார்”- செங்கோட்டையன்

 

மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம், மேகதாது அணையை தடுக்கும் பணிகளை முதல்வர் மேற்கொள்வார் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “அண்ணாமலைக்கு ஏற்பட்ட வேதனையால் பாஜகவிலிருந்து விலகினார். புதிய கட்சி தொடங்கியது அவரது ஜனநாயக உரிமை. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கும் நிலைநாட்டக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. கடந்த 20 நாட்களில் இங்கு என்ன சட்டம், ஒழுங்கு பிரச்சனை வந்துவிட்டது? போதைப்பொருள் நடமாட்டத்தை தீவிரமாக தடுத்து வருகிறோம். எவ்வித தலையீடுமின்றி, அடுத்த 6 மாத காலத்திற்கு அரசு தன்னிச்சையாக செயல்பட வேண்டும். பா.ஜ.கவில் இருக்கும் வேதனை என்னவென்று அண்ணாமலைக்குதான் தெரியும்.. நடப்பதை பொறுத்திருந்து பார்ப்போம். புதிய கட்சி தொடங்கியது அவரது ஜனநாயக உரிமை. மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம். மேகதாது அணையை தடுக்கும் பணிகளை முதல்வர் மேற்கொள்வார்.

தமிழகத்தில் வரவிருக்கும் பருவமழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் அரசு தயாராக உள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. பருவமழை மேலாண்மையில் ஏதேனும் தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டால், அதன்மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.