விஜய் தேவைக்கு மட்டும் பேசுவார், சின்ன சின்ன பிரச்னைக்கு பேசமாட்டார்- செங்கோட்டையன்
தவெகவின் ஒவ்வொரு திட்டங்களும், படிப்படியாக அரசு நிதி நிலைக்கு ஏற்ப வழங்கும் என வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், “கோவை சிறுமி பாலியல் வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யப்பட்டு அதற்காக டிஜிபி உள்ளிட்ட போலீசார் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். முதலமைச்சர் அவர்கள் தினந்தோறும் அறிக்கை விட்டுக் கொண்டும் பேசிக் கொண்டும் இருக்க மாட்டார். தேவையான விஷயங்களுக்கு மட்டும் அவர் பேசுவார், அறிக்கை வெளியிடுவார். மின் வெட்டு குறித்த பிரச்சனைகளுக்கு துறை ரீதியான அமைச்சர் பதில் தருவர்.
8 மாதகாலமாக கடுமையான உழைப்பு காரணமாக மருத்துவ பரிசோதனை செய்யவில்லை. ஆண்டுக்கு இருமுறை உடல் பரிசோதனை செய்வது வழக்கம் என்பதாலும், 8 மாதம் ஆனதாலும் மருத்துவமனையில் தங்கி பரிசோதனை செய்யபட்டது. மாஸ்டர் செக் அப் என்ற அடிப்படையில் மருத்துவமனையில் தங்கி அனைத்து பரிசோதனைகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளது. அனைத்து பரிசோதனைகளும் சரியாக இருக்கின்றது என்ற ஒப்புதலை மருத்துவமனை வழங்கியிருக்கிறது. விரைந்து அனைத்து பணிகளும் செய்வதற்கு சென்னை சென்று கொண்டு இருக்கிறேன். என் உறவினரின் மருத்துவமனை அனைத்தும் இலவசமாக கிடைக்கின்றது , இது தொடர்ந்து நடைபெறுகின்ற ஒரு நிகழ்வு. ஒவ்வொரு திட்டங்களும் படிப்படியாக அரசு நிதி நிலைக்கு ஏற்ப வழங்கும். இது முதல்வர் முடிவு செய்ய வேண்டியது ஒன்று , இந்த கேள்வியை என்னிடம் கேட்பது சரியாக இருக்காது. திட்டங்கள் குறித்து முதல்வர் முடிவு செய்வார், முதல்வர் எந்தெந்த காலங்களில் எப்படி முடிவு செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வார்” என்றார்.