×

“தவெகவுடன் பாமக கூட்டணி... விரைவில் விஜய் அறிவிப்பார்”- செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

 

கூட்டணிக்காக, பாமக ராமதாசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பது குறித்த கேள்விக்கு, விரைவில் கூட்டணி குறித்த அறிவிப்பை விஜய் வெளியிடுவார் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராமதாஸின் பாமக உள்ளிட்ட கட்சிகள் தவெகவில் இணைவது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை விஜய் விரைவில் வெளியிடுவார். தமிழ்நாட்டின் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் கூட்டணி அமையும் எனக் கூறினார்.

முன்னதாக,அந்தியூர் செயல்வீரர்கள் கூட்டத்தில், கே.ஏ.செங்கோட்டையன் பேசும் போது, “திமுகவை வெல்வதற்கு ஒரே சக்தி தமிழக வெற்றி கழகம் மட்டுமே... நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். இன்னும் பல கட்சியில் இருந்து வர இருக்கிறார்கள் நீங்கள் கவலைப்பட தேவையில்லை. கூட்டம் நடத்துவதற்கு தமிழக வெற்றிக் கழகத்திற்கு மட்டுமே விதிகளை விதிக்கின்றனர். நமக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்ட பிறகு தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர், மற்றும் பேருந்து நடத்துனர்களுக்கு விசில் அடிக்க அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் 30 லட்சம் ரூபாய் செலவு செய்து கூட்டத்தை கூட்டுகிறார்கள்,  தவெக ஒரு பைசா கூட செலவில்லாமல் கூட்டம் கூடுகிறார்கள்” என தெரிவித்தார்.