×

“எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதிக்கவில்லை” - பல்டி அடித்த செங்கோட்டையன்  

 

அதிமுக ஒன்றிணைவது குறித்து கட்சி தலைமைக்கு 10 நாட்கள் கெடு விதிக்கவில்லை என அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “அதிமுக ஒன்றிணைவது குறித்து கட்சி தலைமைக்கு 10 நாட்கள் கெடு விதிக்கவில்லை. ஊடகங்கள்தான் அதனை தவறாக புரிந்து கொண்டது. 10 நாட்களில் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும். ஒரு மாதமோ அல்லது ஒன்றரை மாதத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்றுதான் தெரிவித்தேன். நல்லதே நடக்கும்” என்றார்.

10 நாட்களுக்குள் அதிமுக இணைப்புக்கான முயற்சியை தொடங்க வேண்டும் என ஏற்கனவே பேட்டியளித்திருந்த நிலையில் செங்கோட்டையன் தற்போது இதுபோன்று பேட்டியளித்துள்ளார்.