விஜய் பிரச்சாரத்திற்கு முழு பாதுகாப்பு வழங்கக்கோரி செங்கோட்டையன் மனு
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரச்சாரத்திற்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் உள்துறை செயலாளரை சந்தித்து செங்கோட்டையன் மனு அளித்தார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தை விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் விஜய் பிரச்சார பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் தலைவர் செங்கோட்டையன் , தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட் நாயக் மற்றும் உள்துறை செயலாளர் தீரஜ் குமார் ஆகியோரை சந்தித்து மனு அளித்தார். இதனைத் தொடர்ந்து பேட்டி அளித்த செங்கோட்டையன், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரச்சாரத்திற்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மனு அளித்ததாக தெரிவித்தார்.
இதனிடையே தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார். பெரம்பூரில் விஜய் போட்டியிட வாய்ப்பு என கூறப்பட்டுவரும் நிலையில், பிரச்சாரம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடதக்கது.