×

டிடிவி தினகரனுடன் செங்கோட்டையன் சந்திப்பு

 

சென்னை அடையாறில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

டிடிவி தினகரனை சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து பேசியுள்ளார். அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டுமென செங்கோட்டையன் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. ஒரு மணிநேரத்துக்கும் மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றது. டிடிவி தினகரனை ஓபிஎஸ்-ம் தனியாக சந்தித்ததாக தெரிகிறது. 

கட்சியிலிருந்து இருந்து நீக்கப்பட்டவர்களை அதிமுகவினர் சந்தித்தால் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என ஈ.பி.எஸ் கூறியிருந்த நிலையில், செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.