×

விஜய்க்கு கூடும் கூட்டம் ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் தானாக வரும் கூட்டம் - செங்கோட்டையன்..!

 

.ஈரோடு மாவட்டம் நம்பியூரில்  த.வெ.க., தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் அளித்த பேட்டி:

நான் துரோகம் செய்து விட்டதாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் இபிஎஸ் கூறுகிறார். நான் என்ன துரோகம் செய்தேன். அவரை முதல்வராக்கியதும், பொதுச் செயலராக்கியதும்தான் நான் செய்த துரோகமா. அண்ணாமலையை வெளியேற்றினால் தான் கூட்டணி என்று பழனிசாமி கூறினார். சசிகலாவுக்கும் துரோகம் செய்தார்.சசிகலா சிறையில் இருந்து வரும்போது, யாரும் எந்த உதவியும் செய்யக்கூடாது என தடுத்தார். 15 நாள் பரோலில் வந்த சசிகலாவை, 5 நாட்களில் திருப்பி அனுப்பினார். ஓ.பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கினார். அனைத்து உதவிகளையும் செய்த பா.ஜ.,வுடன், 2024 லோக்சபா தேர்தலில் கூட்டணி இல்லை என்று அறிவித்தார்.

எனவே, துரோகத்தின் மொத்த உருவமே இபிஎஸ் தான்.234 தொகுதிகளிலும் த.வெ.க., வெற்றி பெறும். விஜய் தான் அடுத்த முதல்வர் என்பதை மக்கள் முடிவு செய்துவிட்டனர். விஜய்க்கு கூடும் கூட்டம், ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் தானாக வரும் கூட்டம். தமிழகத்திற்கு விஜய் போன்ற ஒரு தலைவர் வர வேண்டும் என்று, அனைத்து தரப்பு மக்களும் காணும் கனவு, வரும் 23ல் நிறைவேறும்.

இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.