×

வீட்டில் இருந்தபடியே செமஸ்டர் தேர்வு – சென்னை பல்கலைக்கழகம்

இணைய வசதி இல்லாத மாணவர்கள் வீட்டில் இருந்தபடி இறுதி செமஸ்டர் தேர்வு எழுத சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன. இருப்பினும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து இளநிலை முதலாம், இரண்டாம் ஆண்டு, பிஇ உள்ளிட்ட கல்லூரி மாணவர்களுக்கு பருவ தேர்வு ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களின் செமஸ்டர் தேர்வு ரத்து செய்ய யுஜிசி
 

இணைய வசதி இல்லாத மாணவர்கள் வீட்டில் இருந்தபடி இறுதி செமஸ்டர் தேர்வு எழுத சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கொரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன. இருப்பினும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து இளநிலை முதலாம், இரண்டாம் ஆண்டு, பிஇ உள்ளிட்ட கல்லூரி மாணவர்களுக்கு பருவ தேர்வு ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களின் செமஸ்டர் தேர்வு ரத்து செய்ய யுஜிசி ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்நிலையில் இறுதி செமஸ்டர் தேர்வு வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் எழுத சென்னை பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது. ஆன்லைன் வசதி இல்லாத மாணவர்கள் செமஸ்டர் தேர்வுகளை வீட்டில் இருந்தபடியே எழுதி , இறுதி விடைத்தாள்களை ஸ்பீட் போஸ்ட் மூலம் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி வைக்கலாம் எனவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

விடை எழுதும் ஏ4 தாள்களின் ஒவ்வொரு பக்கத்திலும் மாணவர்களின் பெயர், பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்டு 18 தாள்களுக்கு மிகாமல் எழுதி அனுப்பலாம் என கூறியுள்ளது சென்னை பல்கலைக்கழகம். காலை 10 மணி முதல் 11 மணி வரை, பகல் 2 மணி முதல் 3 மணி வரையும் என ஒவ்வொரு தேர்வும் 90 நிமிடங்களுக்கு நடைபெற உள்ளது. வினாத்தாள் தரவிறக்க இணைப்பு அந்தந்த மாணவர்களின் செல்போன் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது