எங்களுக்கு யாரும் பூஸ்ட் அளிக்கத் தேவையில்லை- விஜயின் தந்தைக்கு செல்வப்பெருந்தகை பதில்
எங்களுக்கு யாரும் பூஸ்ட் அளிக்க தேவையில்லை என விஜய்யின் தந்தைக்கு செல்வப்பெருந்தகை பதில் அளித்துள்ளார்.
திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய த.வெ.க. தலைவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய்யின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ஆட்சியில் பங்கு என்று விஜய் சொல்கிறார். அதை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும். பிற கட்சிகளுக்கு ஆதரவு கொடுத்து, கொடுத்து தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தேய்ந்துவிட்டது. ஆட்சி அதிகாரத்துக்கு வந்தால் பழைய நிலைமைக்கு காங்கிரஸ் வரும். காங்கிரஸ் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விஜய்யை காங்கிரஸ் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தவெகவுடன் சேர்ந்தால் காங்கிரஸிற்கு தமிழ்நாட்டில் மீண்டும் பவர் கிடைக்கும். விஜய்யுடன் சேர்ந்தால் மீண்டும் வரலாறு படைக்கும் வாய்ப்பு காங்கிரஸ்க்கு கிடைக்கும். திமுக, அதிமுகவுடன் விஜய் சேரக்கூடாது என மக்கள் விரும்புகின்றனர். மாற்றத்தை உருவாக்க அரசியலுக்கு வருவோர் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும்” என்றார்.
இதற்கு பதில் அளித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “எங்களுக்கு யாரும் பூஸ்ட் அளிக்க தேவையில்லை. சந்திரசேகர் எங்களுக்கு பூஸ்ட் கொடுக்கிறேன் என சொன்னதற்கு நன்றி. ஏற்கனவே ராகுல்காந்தி எங்களுக்கு பூஸ்ட், ஹார்லிக்ஸ் கொடுத்துள்ளார். எங்களுக்கு யாரும் பூஸ்ட் கொடுக்க வேண்டாம்”என்றார்