×

“தினகரன் நேற்று வரை துரோகி என சொன்ன இபிஎஸ் உடன் எப்படி அரசியல் செய்யப் போகிறார்”- செல்வப்பெருந்தகை

 

சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் 49-வது புத்தகக் காட்சியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பார்வையிட்டு புத்தகங்களை வாங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, புத்தக கண்காட்சி கட்டணம் இல்லாமல் யார் வேண்டுமானாலும் வரலாம் என்பதால் கூட்டம் அதிகமாக வந்திருக்கிறது, னைத்தும் நம்மை விட்டு சென்றுவிடும் புத்தகமும் அதில் படித்த வரலாறு மட்டும்தான் நம்முடன், அனைவரும் எழுத்தாக பார்க்காமல் அறிவாயுதமாக பார்க்க வேண்டும் என்றார்.

இன்று என் டி ஏ கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்தது தொடர்பான கேள்விக்கு, அது ஒரு இயற்கைக்கு முரணான கூட்டணி, தமிழ்நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி, ஒருபோதும் தமிழ்நாட்டு மக்கள் அந்த கூட்டணியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், நேற்று வரை டிடிவி தினகரன் துரோகி என்றும் பேசி இருக்கிறார், இப்பொழுது எப்படி அவருடன் அரசியல் செய்யப் போகிறார், களம் காண போகிறார், எப்படி மேடை ஏறி வாக்கு கேட்கப் போகிறார் என்ற கேள்வி எல்லாம் மறுபுறம் இருக்க. இந்தக் கூட்டணியில் சேர்ந்த பிறகு எடப்பாடி பெயர் சொல்வதற்கே தவிர்க்கிறார், ஆகவே இந்தக் கூட்டணி தமிழ்நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட என் டி ஏ கூட்டணி, மோடி ஒரு முறை இல்லை 100 முறை வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்றார்.