×

செல்வமுருகன் உயிரிழப்பு: காவல் ஆய்வாளர் மீது கொலை வழக்குப்பதிய கோரி வழக்கு!

விருத்தாசலம் கைதி செல்வமுருகன் உயிரிழப்பு குறித்து அவரது மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். முந்திரி வியாபாரி செல்வமுருகன் என்பவர் கடந்த 28 ஆம் தேதி திருட்டு வழக்கில் கைதாகி விருத்தாச்சலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார் . இதையடுத்து கடந்த 30 ஆம் தேதி சிறையில் மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து கூறிய அவரது குடும்பத்தினர் செல்வமுருகன் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டதாகவும், இரண்டு நாட்கள் அவரை அடித்து போலீசார் துன்புறுத்திய நிலையில் 30 ஆம்
 

விருத்தாசலம் கைதி செல்வமுருகன் உயிரிழப்பு குறித்து அவரது மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

முந்திரி வியாபாரி செல்வமுருகன் என்பவர் கடந்த 28 ஆம் தேதி திருட்டு வழக்கில் கைதாகி விருத்தாச்சலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார் . இதையடுத்து கடந்த 30 ஆம் தேதி சிறையில் மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து கூறிய அவரது குடும்பத்தினர் செல்வமுருகன் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டதாகவும், இரண்டு நாட்கள் அவரை அடித்து போலீசார் துன்புறுத்திய நிலையில் 30 ஆம் தேதி சிறையில் அடைத்ததாகவும் கூறினர்.

அத்துடன் அவரது உடலில் காயங்கள் இருந்ததாக கூறி உடலை வாங்க மறுத்து போராட்டம் செய்தனர். இதை தொடர்ந்து இந்த வழக்கு , டிஜிபி திரிபாதி உத்தரவின் பேரில் சிபிசிஐடி விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்த வழக்கை கையில் எடுத்த சிபிசிஐடி போலீசார், வழக்குப்பதிவு செய்து நேற்றுமுதல் விசாரணையை தொடங்கினர்.

இந்நிலையில் விருதாச்சலம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்ட விசாரணை கைதி செல்வமுருகன் உயிரிழந்த சம்பவம் குறித்து அவரது மனைவி பிரேமா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் , நெய்வேலி காவல் ஆய்வாளர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய கோரியும், செல்வமுருகன் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடக்கோரியும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.