×

காங்., தலைவர் பதவியில் இருந்து விலக செல்வப்பெருந்தகை முடிவு

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து விலக செல்வப்பெருந்தகை முடிவு செய்துள்ளார்.


டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய செல்வப்பெருந்தகை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளரிடம் பேசுகையில், “இனி பதவியில் தொடர வேண்டாம் என என் உள்மனது கூறியது. டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களிடம் காங்கிரஸ் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து பேசினேன். பொறுமையாக இருங்கள் எனவும், அழைப்பதாகவும் கார்கே கூறினார். எனது கோரிக்கையை தலைமை பரிசீலித்து விடுவிக்கும். சில கசப்பான உணர்வு உள்ளது. நண்பர்கள் புரிதலின்றி பேசுகிறார்கள். மாணிக்கம்தாகூர், ஜோதிமணி பற்றி மனம் திறப்பேன்” என்றார்.