×

“வைகோவுக்கு வயசானதால எல்லாமே மறந்துவிட்டது! அவர் திமுகவை எதிர்த்து மாநாடு நடத்தியவர்”- செல்லூர் ராஜூ

 

மதுரை மாவட்டம் பரவை அருகேயுள்ள ஊர்மெச்சிகுளம் பகுதியில் சுத்தகரிப்பட்ட குடிநீர் மற்றும் புதிய அங்கன்வாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் பணிகளை தொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “மக்களில் ஒரு ஆளாக இருப்பதால் மக்கள் எனக்கு ஓட்டுபோடுகிறார்கள். இல்லையென்றால் மக்கள் போயிட்டு வாங்கனு சொல்லிருவாங்க. நிறைய வளர்ச்சி பணிகளை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து  மேற்கொண்டுள்ளேன். திருமாவளவனை திமுகவினர் புலம்ப வைத்து  விட்டார்கள். வடிவம் பெற்று முழு வடிவத்தோடு அழகாக அமைக்கப்பட்டது தேசிய ஜனநாயக கூட்டணி. அங்குதான் வெட்டு, குத்து எல்லாமே, போர்குரல் நடத்துகிட்டிருக்கு, அதில் மெயின்பார்ட் காங்கிரஸ்தான், காங்கிரஸே போர் குரல் எழுப்பியுள்ளனர். அவங்களுக்கு மரியாதை இல்லை, திமுக எப்போதுமே பொதுவாகவே கூட்டணி கட்சியினரை மதிக்கமாட்டார்கள், அதற்கு திருமாவளவனே சான்று. இதன் மூலமாகவாவது எதாவது வடிவம் கொடுப்பாரா என பார்க்கிறார்.

வைகோ திண்டுக்கல்லில் திமுகவை எதிர்த்து மாநாடு நடத்தி  கட்சி தொடங்கினார். 1999ல் எங்களுடன் இருந்தபோது அவருக்கு அங்கீகாரம்  கிடைத்தது. அண்ணன் வைகோவுக்கு வயசாகிவிட்டது, அதனால் மறந்துவிட்டதால் நினைவூட்டுகிறேன்.  எங்களுடன் இருந்ததால் தான் பம்பரம் சின்னம் கிடைத்தது. வைகோ நம்பகதன்மையற்ற தலைவர் என்பதால் அவரை அவரது தொண்டர்கள் தூக்கி எறிந்தனர். திண்டுக்கல் மாநாட்டில் கலைஞரை கட்டிபிடித்தன்  மூலம் வைகோவின் வீர சகாப்தம் முடிந்துவிட்டது. ராஜகண்ணப்பன் ஒரு பச்சோந்தி, ஒரு கட்சியில் நிலையாக இருக்கமாட்டார். தனியாக கட்சி தொடங்கினர். அதிமுகவின்  தலைமையை பேசுவது தவறு. ராஜகண்ணப்பனை யாருக்கும் தெரியும், ஜெ.தான் அடையாளப்படுத்தப்பட்டவர், இவர் பழைய படங்களை விநியோகம் செய்தவர். ஜெயலலிதாவுக்கு எதிராக கட்சி தொடங்கி இரட்டை இலையை முடக்க நினைத்தார். ராஜ கண்ணப்பன் பேச்சையெல்லாம் ஒரு பேச்சாகவே எடுத்துக்கொள்ள கூடாது.

எடப்பாடியாரை முதலமைச்சராக மக்கள் ஏற்றுக்கொண்டு முதலமைச்சர் ஆக போகிறார் என்ற எரிச்சலில் கண்ணப்பன் அப்படி பேசுகிறார். ராஜகண்ணப்பன் பரம்பரை பரம்பரையாக வந்தவர் கிடையாது, உடுப்பி ஹோட்டலில் சேடப்பட்டி முத்தையாவிடம் காலை பிடித்து அழுது சீட்டு கேட்டவர்தான் ராஜகண்ணப்பன். காலை புடிக்கரவரெல்லாம் எங்களை பற்றிலாம் சொல்லக்கூடாது.அதிமுக - திமுகவுக்கும் தான் போட்டி மற்றவர்களை பற்றி எனக்கு தெரியாது. எங்கள் கூட்டணியில் அதிமுக அதிபெரும்பான்மையுடன் தனித்து ஆட்சி அமைக்கும் என எடப்பாடி சொல்லிவிட்டார், பாஜகவும் அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் சொல்லிவிட்டனர். கூட்டணிக்கு புதிய கட்சிகள் எந்த கட்சி வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என பொதுச்செயலாளர் சொல்லியிருக்கிறார்” என்றார்.