×

“முதல்வரின் தோளோடு தோல் நிற்கும் திருமாவளவன்”- சேகர்பாபு புகழாரம்

 

முதல்வரின் தோளோடு தோல் நின்று எதிரிகளை வெல்வதில் தமிழ்நாடு முதலமைச்சருடன் எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் துணை நிற்கிறார் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.


சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவனின் 63 வது பிறந்தநாள் நாள்  விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநிலங்களவை உறுப்பினரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமலஹாசன் கலந்து கொண்டு பாடலுடன் சிறப்புறையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “நாளை 63 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை கொண்டாடும் எழுச்சித்தமிழர் திருமாவளவன் இன்றும் 44 வயது இளைஞர் போலவே இருக்கிறார். அறிவு, நுட்பம், ஆற்றல் என அனைத்தையும் கொண்ட ஒரு தலைவராக தொல்.திருமாவளவன் திகழ்கிறார். 45 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் களத்தில் அவர் சந்தித்த சோதனைகளை வேறொருவர் சந்தித்திருந்தால் இந்நேரம் அரசியல் களத்தில் சன்னியாசம் போயிருப்பார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு வலுவாக கரம் கொடுத்துக் கொண்டிருக்கும் எழுச்சித்தமிழன் தொல் திருமாவளவன் மேலும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்தி மகிழ்கிறோம்” என்றார்.