☰
×

 “திமுகவின் மீது Narrative செட் செய்வது மட்டும்தான் இந்த ஆட்சியில் நடக்கும் பணி” - சேகர்பாபு 

 

தி.மு.க ஆட்சி என்பது அடுப்பில் எரிகின்ற நெருப்பு.. தவெக ஆட்சி என்பது கூரையில் எரிகின்ற நெருப்பு என முன்னாள் அமைச்சர் சேகர்பாபு விமர்சனம் செய்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, "தி.மு.க ஆட்சி என்பது அடுப்பில் எரிகின்ற நெருப்பு.. தவெக ஆட்சி என்பது கூரையில் எரிகின்ற நெருப்பு. தகுதியான கட்சியிடம் ஆட்சி ஒப்படைக்கப்படாததே, துன்பக்கடலில் தமிழகம் மூழ்கியிருப்பதற்குக் காரணம். திமுகவின் மீது Narrative செட் செய்வது மட்டும்தான் இந்த ஆட்சியில் நடக்கும் பணி.  அடுப்பில் எரிகின்ற நெருப்பாக திமுகவும் கூரையில் எரிகின்ற நெருப்பாக தவெகவும் உள்ளது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து, தலைநகரம் 'கொலை நகராக' மாறிவிட்டது. தலைநகரே கொலை நகராக மாறியிருக்கிறது.. இந்த கொடூரத்தை வீழ்த்த மக்கள் தயாராகிறார்கள்" என்றார்.