×

“அதே புஸ்ஸி, அதே லாட்டரி, அதே பஞ்ச் டயலாக்”- விஜயை விமர்சித்த சேகர்பாபு

 

பால்வாடி கட்சிக்கு பவள விழா கட்சி பதில் கூற முடியாது என அமைச்சர் சேகர்பாபு விஜயை விமர்சித்தார்.

அம்பத்தூரில் உள்ள பெருந்தலைவர் காமராசர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 8 பள்ளிகளை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு மிதிவண்டிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பெருந்தலைவர் காமராசர் மகளிர் மேல்நிலை பள்ளியில் 581 மாணவியர்களுக்கும், ராமசாமி மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு 182 மிதிவண்டியும், மாணவிகளுக்கு 130 மிதிவண்டியும் என மொத்தம் 312 மிதி வண்டியும், முகப்பேர் அரசு பள்ளிக்கு 180 மிதி வண்டியும், கொரட்டூர் அரசு பள்ளிக்கு 80 மிதிவண்டியும், அத்திப்பட்டு அரசு பள்ளிக்கு 107 மிதிவண்டியும் என 1260 மிதிவண்டிகள் இன்று வழங்கப்பட்டது. 
693202இந்நிகழ்ச்சியில் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் மண்டலக்குழு தலைவர் பி கே மூர்த்தி உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்களும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, “அசிங்கமாக பேசுவது அரசியல் என்றால் அது எனக்கு வராது. உங்களை வேண்டாம் என்று விட்டு வைத்திருக்கிறேன். அதே புஸ்ஸி, அதே லாட்டரி, அதே பஞ்ச் டயலாக், ஊர் ஊரா  போய் கூட்டம் நடத்துவது தான் தவெக. ஊர் முழுவதும் கூட்டம் நடத்துவது திமுக, பால்வாடி கட்சிக்கு பவள விழா கட்சி பதில் சொன்னால் நன்றாக இருக்காது” என்றார்.