×

திராவிட ஆட்சியாளர்கள், தமிழை வளர்க்கும் இலட்சணம் இதுதான்; வெட்கக்கேடு - சீமான் கண்டனம்!!

 

தமிழைப் பின்னுக்குத் தள்ளி, ஆங்கிலத்தை உயர்த்திப் பிடிப்பதுதான் இவர்களது திராவிட மாடல் ஆட்சி என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 தமிழகத்தில் சமீபத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.  இதில் முதல் பாடத்தில் தமிழ் என்று பதிவிடாமல் மொழிப்பாடம் என்றும் இரண்டாவது பாடத்தில் மட்டும் ஆங்கிலம் என்றும் பதிவிட்டு இருந்தது.  அதிலும் மொழிப்பாடம் என்பதை தமிழில் கூட குறிப்பிடாமல் ஆங்கிலத்தில் 'லாங்குவேஜ்' என்று பதிவிடப்பட்டிருந்தது. தமிழ்நாடு, திராவிட மாடல், திராவிட ஆட்சியாளர்கள் என்று பேசுபவர்கள் மத்தியில்  இந்த விவகாரம் தற்போது பேசும் பொருளாகி உள்ளது

 

null