×

நான் ஆட்சிக்கு வந்தால் சாதி, ஆணவ கொலை செய்தால் அவனை கொன்று புதைத்துவிடுவேன்- சீமான்

 

சூர்யாவை உதைப்பேன் என பதிவு போட்டவரை, உதையுங்கள் நான் காசு தருகிறேன் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனாரின் 85ம் ஆண்டு நினைவு தினம் போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது, இந்த நிகழ்வில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று நினைவு சுடரேற்றியும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “ஜெய் பீம் விவகாரம் குறித்து அன்புமணி எழுதியுள்ள கடிதத்தின் மூலம் அவரின் வலியும் உண்மை தன்மையையும் மறுக்க முடியாது. அந்த குறியீட்டை தெரியாமல் வைத்து விட்டனர் என்பது ஏற்க இயலாது. உலகத்திற்கே தெரியும், அது வன்னியர் அடையாளம் என அடையாளத்தை நீக்கியதை முதலிலே செய்திருக்கலாம், அதை  தவிர்த்திருக்கலாம்,ஒரு சமூகத்தின் வலியை காட்ட மற்றொரு சமுகத்திற்கு வலி,வேதனை ஏற்படுத்தியிருக்க கூடாது. சூர்யாவை எட்டி உதைப்பேன் என கூறியது அநாகரிகமானது, அப்படி எட்டி உதைப்பேன் என கூற அவர் என்ன செந்திலா? சூர்யாக்கு தெரிந்து இது நடைபெற்றிருக்காது, அவரை உதைப்பேன் என கூறுவது வேடிக்கையாக உள்ளது. வேண்டுமென்றால் உதைப்பேன் என பதிவிட்டவரை உதையுங்கள் நான் பணம் தருகிறேன். பாஜகவின் வேர் சாதியில் தான் உள்ளது, சாதி, மதம் இரண்டும் பிஜேபிக்கு இரண்டு கண்கள். அதை வைத்துதான் பாஜக அரசியல் செய்கிறது.


மாணவர்கள் மீதான தாக்குதல் கண்டிக்கதக்கது, கொரோனாவால் ஆன்லைன் பயிற்றுவிக்கபட்டது. தற்போது ஆன்லைனில தேர்வு வேண்டும் என கூறுவது தவறில்லை. இருளர் குறவர் மக்களுக்கு போராடியது,பாதுகாப்பாக இருந்தது வன்னியர்கள்தான், ஏன் அவர்களை தவறாக காட்ட வேண்டும்? உணர்வுபூர்வமான திரைப்படம் வெற்றி பெற்றுவிட்டது விடுங்கள், இதன்மூலம் வன்னியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என அன்புமணி கூறுவதும் சரிதான். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விலைவாசி உயர்வு ஏற்படுகிறது. நான் ஆட்சிக்கு வந்தால் சாதி ஆணவ கொலை செய்தால் அவனை கொன்று புதைத்துவிடுவேன். ஆ.ராசா பொது தொகுதியில் நிற்க வைத்தால் நாங்கள் அவருக்காக வேலை செய்கிறோம். 

நாம் தமிழர் உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக உள்ளது. தமிழ்நாடு அரசை கேள்வி கேட்டதால்தான் சஞ்சீவ் பானர்ஜி மேகலாயவிற்கு மாற்றப்பட்டுள்ளார். நீதி துறையில் அரசியல் ஆதிக்கம் உள்ளது. எடப்பாடி பணம் கொடுத்து கொடுத்து பழகி விட்டதால் பொங்கலுக்கு பணம் கொடுங்கள் என கேட்கிறார்” என தெரிவித்தார்.