×

“சர்கார் போஸ்டர் தான் பிரச்சனை?It's Not Our Problem”- சீமான்

 

மேட்டூர் அணையை கட்டுவதற்கே 10 கோடி ரூபாய் தான் செலவாகியிருக்கும். அந்த அணையை திறக்க செல்ல 6 கோடி ரூபாய் செலவாகியிருப்பதாக  நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சீமான், “முதலமைச்சரை பார்க்க LED வேண்டும் என்கிறார்கள், அதையும் ரசிக்கிறார்கள். மேட்டூர் அணையை கட்டியது ரூ.10 கோடிக்குத்தான், ஆனால் அந்த அணையை திறக்கப்போகிறதுக்கு ரூ.6 கோடி செலவழிக்கிறார்கள். அணையை திறந்து இன்றைய முதல்வர் பூ போட்டார்.. முன்னாள் முதல்வர் தட்டோடு போட்டார் .காவிரி விவகாரத்தை திசை திருப்புகிறார்கள், திசை திருப்பும் அரசியலை நுட்பமாக செய்கிறார்கள். TAKE DIVERSON POLITICS செய்கிறார்கள். மக்கள் மயக்கத்தில் இருக்கின்றனர், நாம் என்ன பேசினாலும் காதில் விழாது. சட்டப்பேரவை நிகழ்வுகள் பிக்பாஸ் பார்ப்பது போல உள்ளது. அருமையான எண்டர்டெய்மெண்ட். சர்க்கார் போஸ்டர் தான் பிரச்சனையா? It's Not Our Problem. அத்தனை மீனவர்கள் போராட்டம், கச்சத்தீவு பிரச்சனை, அத்தனை போராட்டம், காவிரியில் தண்ணீர் வரவில்லை இவ்வளவு போராட்டம் நடந்திருக்கு. இதெல்லாம் அவங்க பிரச்சனை இல்லையாம். சர்க்கார் போஸ்டர் கிழித்ததுதான் போஸ்டராம்.” என்றார்.