×

"ஈரானை கைப்பற்றினால்தான் தவெக வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும்"- சீமான்

 

இதுவரை நடந்த அனைத்தையும் அழித்துவிட்டு இன்றிலிருந்து அனைத்தையும் புதிதாக தொடங்குவோம் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.


மறைமலை நகர் தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய சீமான், “இதுவரை நடந்த அனைத்தையும் அழித்துவிட்டு இன்றிலிருந்து அனைத்தையும் புதிதாக தொடங்குவோம். இன்று 2026 மே 18ஐ நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட நாளாக கருத்தில் கொண்டு வீரியமாக வேலை செய்ய தொடங்குவோம். ஜூன் மாதம் முதல் ஒவ்வொரு மாவட்டமா பயணம் வந்து உங்களை சந்தித்து என்னென்ன சரி செய்யப்படனும் கேட்டு சரிசெய்து, படையை பெருக்கி தடையை நொறுக்கி‌ இனத்தின் விடுதலையையே இறுதி இலக்கு ஆக்குவோம். நல்ல வேளை என்னைத் தோற்கடித்து சட்டமன்றத்திற்குள் நுழையவிடாமல் செய்தீர்கள்; நல்வாய்ப்பாக தப்பித்துவிட்டீர்கள், ஐந்தாரு பேரோடு சட்டமன்றத்திற்குள் நுழைந்திருந்தேன் என்றால் எல்லோரும் வெளியில்தான் நின்றிருப்பீர்கள்.


பேசாதவனை தூக்கி வைக்கிறார்கள், பேசுபவனை தூக்கி எறிகிறார்கள். அதிகாரம் வலிமையானது; ஆனால் நிலையானது அல்ல. 7அடி நீளம் தாண்ட 70அடி பின்னே போக வேண்டியுள்ளது. எளிதாக கிடைக்கும் எந்த பொருளுக்கும் மதிப்பு கிடையாது. பத்து லட்சம் கோடி கடன் இருக்கு, இலவசம் தர முடியாதுனு நாங்கள் உண்மையை சொன்னோம்; தோற்றுப்போனோம், அதை மேன்மையாக கருதுகிறோம். ஈரானை கைப்பற்றினால்தான் தவெக வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். தமிழ்நாட்டிற்கு 10 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது என்று இப்போதுதான் தெரிகிறதா? கொடுக்க முடியாது என்று தெரிந்தும் வெற்று வாக்குறுதிகளை கொடுப்பதுதான் மக்களுக்கு செய்த துரோகம், ஏமாற்று. இலவசங்களை கொடுக்க முடியாது என்று உண்மையைச் சொல்லி தோற்றுப்போனதை மேன்மையாக கருதுகிறோம்.” என்றார்.