×

“விஜய் முகத்திற்கு வாக்கு செலுத்துவார்களா? வேடிக்கையாக இருக்கு”- சீமான்

 

ஒரு சித்தாந்தத்தை வெறும் சினிமாவை வைத்து வீழ்த்திவிட முடியாது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “அறுபது ஆண்டுகளுக்கு மேல் அதிகாரத்தில் இருக்கும் ஒரு சித்தாந்தத்தை வெறும் சினிமாவை வைத்து வீழ்த்திவிட முடியாது. அண்ணா வழியில் சென்று திமுகவை வீழ்த்துவேன் என சொல்வதே வேடிக்கையாக உள்ளது. விஜய் முகத்திற்காக ஓட்டுப் போடுவார்களா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆகச்சிறந்த கொள்கை கோட்பாடுகளை வைத்து தான் வீழ்த்த முடியும். முகம் இன்று இருப்பதுபோல் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இருக்காது. அந்த முகத்திற்கு வாக்கு செலுத்துவார்களா என்பதனை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

நான் சொன்ன கதையைதான் கூறியுள்ளார். தவெக மதுரை மாநாட்டில் விஜய் சொன்ன குட்டிக்கதையை 2021 தேர்தலின்போதே நான் பேசிவிட்டேன். மன்னன் என்று நான் கூறியதை தளபதி என்று மாற்றி விய கூறியுள்ளார். அண்ணனிடம் கற்றதை தம்பி சொல்லியிருக்கிறார். நானும் எங்கேயோ கற்றதுதானே... தவறொன்றுமில்லை. தவெக தலைவர் விஜயின் பேச்சு வேடிக்கையாக உள்ளது. எங்கள் மொழியை இழிவு செய்வோர் யாராக இருந்தாலும் அவர்கள் எங்கள் எதிரி. பாரதியார் பாடாத பெண்ணியத்தையா பெரியார் பேசிவிட்டார்? எனக் கேள்வி எழுப்பினார்.