×

பட்டினப் பிரவேசத்துக்கு தடை விதிப்பதற்கு பதிலாக ஆதினமே வேண்டாம் என தமிழக அரசு கூறியிருக்க வேண்டும்- சீமான்

 

இந்தி உள்ளிட்ட பிறமொழிகளை தேவைப்பட்டால் கற்றுக் கொள்ளலாம் எனவும் இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை பெருங்குடியில், 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கூட்டத்தில் பேசிய போது, ஃபிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா ஆகியோரின் கருத்துகளை கூறி, இளைஞர்களுக்கு வன்முறை உணர்வை தூண்டியதாக சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கிற்காக சென்னை சைதாப்பேட்டை நடுவர் நீதிமன்றத்தில் சீமான் ஆஜரானார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சீமான், “மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் தனக்கும் எந்தவித கருத்துபாடும் இல்லை. அன்பும் பாசமும் அதே அளவு இருந்தாலும் 10 மணி நேரம் மின்சாரம் இல்லை. மற்ற மாநிலங்களை விட அதிக விலை கொடுத்து மின்சாரத்தை தமிழகம் வாங்குகிறது. அதற்கான பதிலை அமைச்சர் வழங்க வேண்டும்” எனக் கூறினார். 

இந்தி பேசினால் நல்லவர்கள் என நடிகை சுகாசினி தெரிவித்த கருத்துக்கு, இந்தி பேசதவர்கள் கெட்டவர்களா ? என கேள்வி எழுப்பிய சீமான், தேவைப்பட்டால் பிறமொழிகளை படிக்கலாம் என்றும் ஆனால் கட்டாயம் படித்தாக வேண்டும் என்பது சரியல்ல என்றும் கூறினார். பட்டினப் பிரவேசம் தொடர்பான கேள்விக்கு இத்தனை அறிவியல் வளர்ச்சிக்கு பிறகு பல்லக்கு தூக்குவதற்கு ஆதினமே வேண்டாம் என தமிழக அரசு சொல்லியிருக்க வேண்டும் என அவர் கருத்துத் தெரிவித்தார்.